Saturday 4 December 2010

டிசம்பர்-3 2010

டிசம்பர்-3 2010 அன்று
கிளாக் டீவியில் ஒளிபரப்பப்பட்டது
 

S.TV-யில் ஒளிபரப்பப்பட்டது

Ten TV-யில் ஒளிபரப்பப்பட்டது

 

Monday 14 June 2010

டாஸ்மாக்-கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளர்கள் அமைப்பு மாநில கூட்டம்

தமிழ்நாடு டாஸ்மாக் உடல் ஊனமுற்றோர் பணியாளர் நல்வாழ்வுச் சங்கத்தின் சார்பில் (இணைப்பு : தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு) 13.06.2010 அன்று சங்குருநாத மகாமுனிவர் சன்னதி, திருவாணைக்கோவில், திருச்சி என்ற இடத்தில் சங்க "சங்க செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்" நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத்தலைவர் திரு.நாச்சியப்பன் தலைமையேற்றார். திரு. அரியக்குமார், மாநில செயலாளர் அவர்கள் முன்னிலை வகித்தார்.  திரு.பூபதி, மாநில துணைத்தலைவர்,  தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு. திரு.சையதுமுஸ்தபா, மாநில துணைத்தலைவர், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு. மற்றும் திரு.புஷ்பராஜ், தென்மண்டல பொருளாளர், தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு. திரு.மாரிக்கண்ணன், செயலாளர், திருச்சிராப்பள்ளி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

திரு.பாரூக் - சிவகங்கை, திரு.முருகன் - மதுரை, திரு.பழனிச்சாமி - விழுப்புரம், திரு.கந்தகுமார் - திருநெல்வேலி, திரு.வேல்ச்சாமி - கடலூர், திரு. சண்முகம் - தூத்துக்குடி,  திரு. ஆறுமுகம் - திருச்சி ஆகியோர் கூட்டத்தில் சிறப்புரையாற்றினர்.


இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
1) தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கடந்த 19.08.2008 அன்று நேரில் சந்தித்து அரசாணை 151-ஐ செயல்படுத்தக்கோரி மனு டஅளித்தனர். அந்த அரசாணையில் அரசு நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உடல் ஊனமுற்றோர் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தால் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரம் செய்ய வேண்டும். அந்த அரசாணையை டாஸ்மாக் என்ற அரசு நிறுவனத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பொருந்தச்செய்ய அரசுக்கு மீண்டும் வலியுறுத்துதல்.

2) தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகள் பணியாளர் நல்வாழ்வுச் சங்கம் சார்பில் அரசுக்கு பல முறை அரசாணை 151-ஐ செயல்படுத்த வலியுறுத்தியும் எந்த ஒரு பதிலும் இல்லை.  மேலும் தமிழக முதல்வர் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ட்ஆட்சித்தலைவர்கள் ஆகியோரிடமும் நேரிடையாக மனு அளித்தும் இந்த 151 அரசாணை டாஸ்மாக்கில் பணிபுரியும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லை என மறுத்து வருகின்றனர்.  இந்த அரசாணையை எங்களுக்கும் செயல்படுத்தியும், இந்த அரசாணையில் இடர்பாடுகள் எதுவாக இருந்தாலும் அந்த துறை அதிகாரிகளே சரிசெய்து காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரம் செய்யலாம் என்று இருந்தும் டாஸ்மாக் அரசு நிறுவன அதிகாரிகளும் மறுத்து வருகின்றனர்.  இதை செயல்படுத்தக்கோரியும், மேலும் இந்த துறையில் இல்லையென்றாலும் எங்களை வேறு துறைக்காவது பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்ற கோரி சென்னை கோட்டை முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

உண்ணாவிரத நாள் 12.07.2010 எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. (சில பல காரணங்களால் தேதி மாற்றம் செய்யப்படலாம். சங்க பொருப்பாளர்களை அணுகி விவரம் பெறவும்.

இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களைச்சார்ந்த மாற்றுத்திறன் டாஸ்மாக் பணியாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

முடிவில் திரு. ஆறுமுகம் - தலைவர், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளர்கள் பணியாளர் சங்கம்.



Monday 22 March 2010

மீட்பு போராட்டம்

தேசிய பார்வையற்றோர் இணையத்திற்காக திருச்சி மாநகராட்சியால் வழங்கப்பட்ட இடத்தை மீண்டும் மாநகராட்சியே ஆக்கிரமிப்பு செய்ததை எதிர்த்து ஆர்பாட்டம்.


















Friday 22 January 2010

முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு 'நன்றி பாராட்டும் விழா'

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பினால், நேற்று (21.01.10) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட' நன்றி பாராட்டும் விழாவில்' கலந்து கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, கல்விச் சேவையில், இடைநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றும் தகமை பெற்ற பார்வையற்றோர்களுக்கு பணிநியமனச் சான்றுகளை வழங்கினார்.

Monday 7 December 2009

முப்பெரும் விழா

விழா அழைப்பிதழ்

விழா அமைப்பாளர்கள்


நிகழ்ச்சி தலைவர், திரு.T .அசோக் குமார். மற்றும் அவரது துணைவியார் A.எழிலரசி அசோக்குமார்.