Friday, 22 January 2010

முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு 'நன்றி பாராட்டும் விழா'

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பினால், நேற்று (21.01.10) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட' நன்றி பாராட்டும் விழாவில்' கலந்து கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, கல்விச் சேவையில், இடைநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றும் தகமை பெற்ற பார்வையற்றோர்களுக்கு பணிநியமனச் சான்றுகளை வழங்கினார்.